தவறான திசையில் பயணித்த கார்: மூவரின் உயிரை பலி வாங்கிய பரிதாபம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
151Shares

பிரித்தானிய நெடுஞ்சாலை ஒன்றில் தவறான திசையில் பயணித்த ஒரு கார் விபத்துக்குள்ளானதில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Oxfordshire பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் கேரவன் ஒன்றுடன் இணைந்த ஒரு கார் தவறான பாதையில் பயணித்தது.

அது குறித்து பொலிசாருக்கு தகவல் சென்று அவர்கள் அதை தொடர முயல்வதற்குள் அந்த கார் இன்னொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

அந்த காரில் பயணம் செய்த 80 வயது மதிக்கத்தக்க இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததோடு, எதிரே வந்த காரில் இருந்த இன்னொருவரும் பலியானார்.

சாலையில் செல்லும் கார் ஒன்றில் இருந்த கெமராவில் பதிவாகியுள்ள காட்சியில் எதிர்பாராத விதமாக தவறான பாதையில் ஒரு கார் வருவதையும், அதைக் கண்டு அந்த கார் விலகிச் செல்வதையும், செல்லும் வழியில் அதேபோல் இன்னொரு காரும் வழி விலகி நிற்பதையும் காண முடிகிறது.

அந்த கார் வேறொரு நாட்டைச் சேர்ந்த கார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். எதனால் அந்த கார் தவறான திசையில் வந்தது, அதில் இருந்தவர்கள் யார், எந்த இடத்தில் அவர்கள் தவறான திசையில் திரும்பினார்கள் என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்