பழசை மறக்காத ஒரு இளவரசர், முழங்காலிடும் ஒரு இளவரசி, இப்படி ஒரு தம்பதியைப் பார்த்ததுண்டா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
498Shares

காமன்வெல்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியும் இளவரசி மேகனும் அவுஸ்திரேலியாவைக் கலக்கி வர, அவர்களைக் குறித்த செய்திகள் உலகையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

சில காலம் முன் சந்தித்த ஒரு முதிய பெண்மணியை மறக்காமல் கூட்டத்தில் அடையாளம் கண்டு விசாரிக்கும் ஒரு இளவரசர், அந்த பெண் முன் முழங்காலிட்டு நலம் விசாரிக்கும் இளவரசி என உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் ஹரியும் மேகனும்.

2015ஆம் ஆண்டு சிட்னியில் Victoria Cross என்னும் மெடலை அணிந்திருந்த பெண்ணைக் கண்டு நலம் விசாரித்தார் இளவரசர் ஹரி.

அந்தப் பெண்ணின் பெயர் Daphne Dunne, போரில் வீர மரணம் அடைந்த தனது கணவருக்காக வழங்கப்பட்ட மெடலை அவர் அணிந்திருந்தார்.

விடைபெறும்போது, Daphneயின் கன்னத்தில் ஹரி முத்தம் ஒன்றைக் கொடுக்க, தற்போது 98 வயதாகும் அந்த பெண்ணின் மனதில் இடம் பிடித்து விட்டார் ஹரி.

மீண்டும் 2017ஆம் ஆண்டு ஹரி அவுஸ்திரேலியா வருவதைக் கேள்விப்பட்டு கொட்டும் மழையில் ஏழு மணி நேரம் அவரைக் காண காத்திருந்தார் Daphne.

இம்முறையும் Daphneயைச் சந்தித்து அளவளாவிய ஹரி, பிரிந்து செல்லும்போது அடுத்த கன்னத்தில் இன்னொரு முத்தம் கொடுத்துச் சென்றார்.

தற்போது மூன்றாம் முறையாக அவுஸ்திரேலியா வந்துள்ள ஹரியை சந்திக்க பூங்கொத்துகளோடு Daphne காத்திருக்க இம்முறையும் அவரை ஏமாற்றவில்லை ஹரி.

கட்டியணைத்து அவரை நலம் விசாரித்ததோடு தனது மனைவியான மேகனுக்கும் அவரை ஹரி அறிமுகம் செய்து வைக்க, மேகன் ஓ, இதுதான் Daphneயா என்று ஆச்சரியப்பட்டு விசாரிக்க அவர்கள் இருவரும் பெற்றோராகப் போவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் Daphne.

அப்போது ஒரு இளவரசியாக இருந்தும் ஒரு குடிமகள் முன்பு முழங்காலிட்டு அவரை நலம் விசாரிக்கும் மேகனை கெமராக்கள் தப்பவிடவில்லை.

மறுமுறை உங்களைக் காண வரும்போது ஒரு குட்டிக் குழந்தையோடு வருவோம் என்றபடி விடைபெற்றனர் ராஜ தம்பதியினர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்