மெர்க்கலின் கர்ப்பம் பற்றி அவருடைய அக்கா சமந்தா என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா
434Shares

பிரித்தானிய இளவரசி மெர்க்கல் கர்ப்பம் அடைந்திருப்பது குறித்து உலக பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில் அவருடைய அக்கா சமந்தா கூறியிருக்கும் கருத்து வைரலாக பேசப்பட்டு வருகிறது.

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணம் முடிந்து 5 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது இளவரசி மெர்க்கல் கர்ப்பம் அடைந்திருப்பதாக கெங்சிங்டன் அரண்மனை நிர்வாகம் நேற்று அறிவிப்பினை வெளியிட்டது.

மேலும் 2019ம் ஆண்டு ஒரு இளவேனிற் காலத்தில் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பானது வெளியான அடுத்த சில நிமிடங்களில் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடித்தது. பொதுமக்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமுக வலைத்தளங்களின் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்து தம்பதியினர் இருவருமே அளவுகடந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து மெர்க்கல் தாய் Doria Ragland மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பேரக்குழந்தையின் வரவை எதிர்பார்த்தது ஆவலாக காத்திருப்பதாகவும் அரண்மனை நிர்வாகம் கூறியிருந்தது.

ஆரம்பம் முதலே மெர்க்கலை கடுமையாக விமர்சித்து வந்த அவருடைய சகோதரி சமந்தா இந்த அறிவிப்பு குறித்து என்ன கூறுவார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கூறியுள்ள சமந்தா, "கடந்த வருடத்தில் நடந்த எல்லாவற்றையும் இந்த அறிவிப்பு மறைத்துவிட்டது. மேகன் மகிழ்ச்சியாகவும் அமைதியுடனும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நேர்மறையானதாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருக்கும் தேவை. ஒரு குழந்தை அனைவரின் மனதையும் மென்மையாக மாற்றிவிட்டது" என கூறியுள்ளார்.

மெர்க்கல் பற்றி சர்ச்சையான குற்றச்சாட்டுக்களை மட்டுமே கூறிவந்த சமந்தாவின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்