அவ்வளவு பெரிய பூவை என் மனைவிக்கு கொடுக்காதீர்கள்: மக்களை திட்டும் ஹரியின் வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
360Shares

அவ்வளவு பெரிய பூக்களை என் மனைவிக்கு கொடுக்காதீர்கள் என பொதுமக்களை பிரித்தானிய இளவரசர் ஹரி விளையாட்டாக கோபித்துக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் Taronga வன விலங்குகள் பூங்காவுக்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.

தம்பதியினரை வரவேற்கும் வண்ணமாக இளவரசி மேகன் கையில் ஒரு பெரிய பூங்கொத்து கொடுக்கப்பட்டது.


இதற்கிடையில் இளவரசர் ஹரியைப் பார்த்து உற்சாகமடைந்த பொதுமக்கள், ஹரி, ஹரி எனக் கத்த, அவர்களிடம் வந்த ஹரி, புகார் கூறுவது போல், அவ்வளவு பெரிய பூங்கொத்துகளை என் மனைவிக்கு கொடுக்காதீர்கள் என்று செல்லமாக கோபித்துக் கொள்ள, மக்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர்.

ஹரியைத் தொடர்ந்து மேகன் வர, அவரையும் மக்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்கின்றனர்.எனக்கு கொடுத்த மலர்களுக்காக நன்றி என்கிறார் மேகன்.

விரைவில் பெற்றோராகப் போகும் ராஜ தம்பதியினர், பொதுமக்களுடன் மகிழ்ச்சியுடன் கை குலுக்கி அவர்களை மகிழ்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்