கர்ப்பமுற்றதும் இளவரசி டயானாவை கௌரவித்த இளவரசி மேகன்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
277Shares

பிரித்தானிய மக்களுக்கு இளவரசி டயானாவை எவ்வளவு பிடிக்குமோ, இளவரசர் ஹரிக்கு இளவரசி டயானாவை எவ்வளவு பிடிக்குமோ, அதே அளவிற்கு தனது காதல் கணவரின் தாயும் தனது மாமியாருமான டயானாவை இளவரசி மேகனுக்கும் பிடிக்கும்.

அதை அவ்வப்போது நினைவு படுத்தியிருக்கிறார் மேகன். தான் கர்ப்பமுற்றதும், மீண்டும் ஒரு முறை இளவரசி டயானாவை கௌரவிக்கும் வகையில் அவர் அணிந்த நகைகளை அணிந்து கொண்டிருக்கிறார் மேகன்.

அது இளவரசி டயானாவின் ஆசையும் கூட. தான் இறப்பதற்குமுன் எழுதிய கடிதம் ஒன்றில், தனது நகைகள் தனது மகன்களுக்கு கொடுக்கப்பட வேண்டும், அவற்றை அவர்களது மனைவிகள் அணிய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று எழுதி வைத்திருக்கிறார் டயானா.

அவரது விருப்பம் போலவே இளவரசி மேகனும் தனது மாமியாரின் நகைகளை அணிந்து அவரை கௌரவிப்பது வழக்கம்.

இப்போது தான் கர்ப்பமுற்றதும் மீண்டும் அவர் தனது மாமியாரை நினைவுகூறும் வகையில், அவரை கௌரவிக்கும் வகையில் அவரது நகைகளை அணிந்து கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு தனது கணவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேகன், இளவரசி டயானாவின் பட்டாம்பூச்சி வடிவ கம்மலையும், அவரது பிரேஸ்லெட்டையும் அணிந்துள்ளார்.

இதற்குமுன் தனது மனைவிக்கு ஹரி அளித்த நிச்சயதார்த்த மோதிரத்திலும் அவருக்கு டயானா பரிசளித்த இரண்டு வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

திருமண நாள் அன்றும் எமரால்ட் மோதிரம் ஒன்றை அணிந்து டயானாவை கௌரவித்த மேகன், முதல் முறை மக்கள் முன் தோன்றும்போதும் டயானாவின் பிரேஸ்லெட்டின் மாடலை பின்பற்றி செய்யப்பட்ட ஒரு பிரேஸ்லெட்டை அணிந்திருந்தார்.

தற்போது தான் கர்ப்பமுற்றதும்கூட, டயானாவின் கம்மலையும் பிரேஸ்லெட்டையும் அணிந்து மீண்டும் ஒரு முறை தனது மாமியாரை கௌரவித்துள்ளார் இளவரசி மேகன்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்