இளவரசி மெர்க்கலுக்கு பிறக்கப்போகும் குழந்தை எந்த நாட்டின் குடிமகன்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
217Shares

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் கர்ப்பமாக இருப்பதாகவும் 2019 ஆம் ஆண்டில் தம்பதியினர் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுப்பார்கள் என கெசிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், பிறக்கப்போகும் குழந்தை பிரித்தானிய குடிமகனா? அமெரிக்க குடிமகனா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஏனெனில், மெர்க்கல் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர். இவர், பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்துகொண்டு பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மெர்க்கல் அமெரிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் பட்சத்தில், தனது நாட்டுடன் தொடர்பினை வைத்திருக்கொண்டிந்தார் என்றால் அவருக்கு பிறக்கப்போகும் குழந்தை இரட்டை குடியுரிமை பெறும்.

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, குழந்தை எங்கு பிறந்தது? பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? மற்றும் அவர்கள் எந்த நாட்டு நபரை திருமணம் செய்துகொண்டார்கள்? ஆகிய மூன்று காரணிகள் அடிப்படையாக பார்க்கப்படுகின்றன.

வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க தூதரக அறிக்கை என்று அழைக்கப்படும் ஒரு படிவத்தை அவர்கள் பூர்த்தி செய்து, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் மெர்க்கலின் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்