பிரித்தானியாவை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு: குற்றவாளியின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் தாயார் மற்றும் மகளை படுகொலை செய்த வழக்கில் 28 வயது இளைஞரின் புகைப்படத்தை கென்ட் நகர பொலிசார் முதன் முறையாக வெளியிட்டுள்ளனர்.

கென்ட் நகரத்தில் உள்ள Hadlow கிராமத்தில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் David Harris(78) என்பவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

டேவிட் ஹாரிஸின் குடியிருப்புக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் மூவரையும் கத்தியால் தாக்கியதாகவும், அதில் மார்கரெட்(78) மற்றும் அவர்களுடைய மகள் ஷரோன்(55) ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் பொலிசார் டேவிட் ஹாரிஸின் அண்டை வீட்டு இளைஞரான 28 வயது Jack Ralph என்பவரை கைது செய்துள்ளது.

ஹாரிஸுடன் ஏற்பட்ட சிறு வாக்குவாதமே ரால்ஃப் இந்த படுகொலையை செய்ய தூண்டியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ரால்ஃப் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவரது சமூக வலைதள பக்கத்தில், இதுவரை நான் செய்த தவறுகளை அழித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

பொலிசார் குற்றுயிராக கிடந்த ஹாரிஸை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நாளை ரால்ஃபினை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருப்பதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...