விமானத்தில் சுருண்டு விழுந்து இறந்த 15 வயது மகள்! இறக்கும் தருவாயில் அம்மாவிடம் சொன்ன கடைசி வார்த்தை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சாண்ட்விட்ச் சாப்பிட்ட இளம் பெண் இறப்பதற்கு முன் அம்மாவிடம் நான் உன்னை நேசிக்கிறேன், விரைவில் உங்களுடன் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Fulham பகுதியைச் சேர்ந்தவர் Natasha Ednan-Laperouse. 15 வயதான இவர் கடந்த ஜுலை மாதம் 16-ஆம் திகதி British Airways விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்தில் தோழி மற்றும் தந்தையுடன் லண்டனிலிருந்து, பிரான்சிற்கு சென்றுள்ளார்.

அப்போது இவர் விமானநிலையத்தில் இருக்கும் சாண்ட்விச்சை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது ஒவ்வாமையின் காரணமாக அவதிப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து Natasha Ednan-Laperouse-ன் தாய் Tanya Ednan-Laperouse கூறுகையில், என் மகள் பிரான்சின் நைஸ் நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

மருத்துவர்கள் மகள் அருகில் இருந்த என் கணவரிடம் உடலில் உள்ள உறுப்பு செயலிழந்து வருகின்றன, அவளுடைய மூளையின் செயல்பாட்டும் குறைந்து கொண்டே வருகின்றன.

இதனால் மகளை காப்பாற்றுவது கடினம், உடனடியாக இது குறித்து உங்கள் மனைவியிடம் கூறிவிடுங்கள் என்று தெரிவித்துள்ளனர். என்னை தொடர்பு கொண்ட கணவர் உன் மகளுக்கு குட் பை சொல்லிவிடு, இன்னும் சில நிமிடங்களில் இறக்கப் போகிறாள் என்று கூறினார்.

நான் அப்படியே தரையில் விழுந்தேன், உடனடியாக அவர் என் மகளின் காதில் போனை வைத்தார். அவள் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், விரைவில் உங்களுடன் இருப்பேன் என்று கூறிய பின் பேச்சு இல்லை, இறந்துவிட்டாள் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...