ஒரே பிரசவத்தில் பிறந்து இறந்த 8 குழந்தைகள்: இளவரசி டயானா செய்த செயல்.... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்து இறந்த நிலையில் அவருக்கு டயானா ஆறுதலாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

மாண்டி அல்வுட் (53) என்ற பெண் கடந்த 1996-ஆம் ஆண்டு உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டவர் ஆவார்.

காரணம், அப்போது கர்ப்பமாக இருந்த அவர் தனது வயிற்றில் எட்டு குழந்தைள் உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து குழந்தைகளை மாண்டி பெற்றெடுத்த நிலையில் அனைத்தும் பரிதாபமாக இறந்து போனது. இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளான மாண்டி மதுவுக்கு அடிமையானார்.

பெரும் போராட்டத்துக்கு பின்னர் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளார் மாண்டி. அவர் கூறுகையில், என் கணவர் பவுல் ஹுட்சனை நான் பிரிந்து வாழ்கிறேன்.

குழந்தைகள் இறந்தபின்னர் நான் மன அழுத்தத்தில் இருந்தேன், அப்போது பிரித்தானிய இளவரசி டயானா என்னை தொடர்பு கொண்டார்.

அவரை இரண்டு முறை பிரபல நட்சத்திர ஹொட்டல்களில் சந்தித்து பேசியுள்ளேன். எனக்கு டயானா ஆறுதல் கூறினார்.

அவரின் கணவர் சார்லஸ் மற்றும் இரண்டாவது மனைவி கமீலா குறித்து என்னிடம் பேசினார். 1996 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் சந்திப்பு நடந்தது என கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடந்ததால் மாண்டியுடன் டயானா புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை. இதோடு தனது போன் நம்பரையும் டயானா கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...