லண்டனில் நடந்த கத்தி குத்து சம்பவம்! முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இளைஞர்

Report Print Santhan in பிரித்தானியா

இரயிலில் நடந்த வாக்குவாதத்தின் போது இளைஞரை மற்றொரு நபர் கத்தியால் குத்தியதால், அந்த நபர் முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Stratford மற்றும் Mile End நிலையத்திற்கு இடையிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்களை இணையவாசிகள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தில் இளைஞர் ஒருவர் முகம் முழுவதும் இரத்தம் வடிந்த நிலையில் போனை பிடித்த படி உள்ளார். இரயிலின் உள்ளே இருக்கும் செய்திதாளில் இரத்தம் படிந்துள்ளது.

இந்த சம்பவத்தை பார்த்த நபர் கூறுகையில், இரயிலின் உள்ளே இரண்டு பேருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியால், மற்றொருவரின் முகத்தை குத்தினார்.

இதில் அந்த நபர் காயமடைந்தார். இந்த சம்பவம் Stratford மற்றும் Mile End இரயில் நிலையத்திற்கு இடையில் நடந்தது. அதன் பின் அருகிலிருக்கும் இரயில் நிலையம் வந்தவுடன் அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் தாக்குதல் நடத்திய நபர் குறித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர். இந்த சம்பவம் சரியாக உள்ளூர் நேரப்படி அதிகாலை 12.47 மணிக்கு நடந்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...