70 ஆண்களால் துஸ்பிரயோகம்... 13 வயதில் கர்ப்பம்: அம்பலமான பிரித்தானிய இளம்பெண்ணின் துயரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இங்கிலாந்தின் டெல்ஃபோர்ட் நகரில் சிறார்களை துஸ்பிரயோகம் செய்யும் கும்பலால் 12 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் இதுவரை ஒரே ஒரு நபர் மட்டும் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

மேற்கு மத்திய இங்கிலாந்தின் டெல்ஃபோர்ட் நகரில் ரகசியமாக செயல்பட்டுவரும் சிறார்களை துஸ்பிரயோகம் செய்யும் கும்பல் தற்போது 19 வயதாகும் குறித்த இளம்பெண் 12 வயதாக இருக்கும்போது சீரழித்துள்ளது.

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் சுமார் 70 பேரால் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கப்பட்டதாக கூறும் அந்த இளம் பெண், தமது 13 வயதில் முதன் முறையாக கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் உதவியுடன் கருவை கலைத்திருந்தாலும், அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் டி.என்.ஏ சோதனையில் சிக்கிய நபர், பொய்யான காரணம் கூறி தண்டனையில் இருந்து தப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்ஃபோர்ட் நகரில் இருந்து தமது 16-வது வயதில் வெளியேறும் வரை தினசரி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையானதாக கூறும் அந்த இளம்பெண்,

தமக்கு இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனவும், அதுவரை தாம் போராட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமக்குமட்டுமல்ல அந்த நகரத்தில் அப்பாவியான பல சிறார்களும் இதே துயரத்தை அனுபவித்து வருவது தம்மை மேலும் அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

குறித்த 70 பேர் கொண்ட பட்டியலில் 23 வயதான பல்ராஜ் சிங் என்பவர் மட்டும் துஸ்பிரயோக வழக்கில் மூன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய பொலிஸ் அதிகாரி ஒருவர், குறித்த வழக்கானது தற்போதே விஸ்ரூபம் எடுத்துள்ளதாகவும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1980 முதல் 11 வயதுக்கு மேற்பட்ட சுமார் 1,000 சிறார்கள் டெல்ஃபோர்ட் நகரில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு இரையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...