டயானாவின் ஆவி எங்களுடன் பேசியது: அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க இரட்டையர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானா, இறந்த பிறகும் தங்களுடன் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பிலிருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க இரட்டையர்கள், இளவரசர் ஹரி, மேகன் திருமண வாழ்வில் பிரச்சினைகள் ஏற்படும் என அவர் தெரிவித்ததாகக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஒத்த உருவமுடைய இரட்டையர்களான Terry மற்றும் Linda Jamison இருவரும் தங்களுக்கு 20 வயதாகும்போது பயங்கர கனவுகளைக் காணத் தொடங்கினர்.

அப்போதிருந்து, சுனாமி உள்ளிட்ட எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விடயங்களைக் குறித்து முன்கூட்டியே அவர்கள் கணித்துக் கூறத் தொடங்கினர்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைகள் குறித்தும் அவர்கள் சரியாக கணித்தனர்.

தற்போது டயானா, இளவரசர் ஹரி மற்றும் மேகன் குறித்து பல விடயங்களை தெரிவித்துள்ளதாக கூறி அவர்கள் அதிர்ச்சியளித்துள்ளனர்.

ஹரி, மேகனைக் கண்டுபிடித்தது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள டயானா, ஆனால் அவர்கள் வாழ்வு எப்போதுமே அமைதியாக இருக்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரி, வரும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் எல்லா கண்களும் உன்னையே கவனித்துக் கொண்டிருக்கும், சரியானதைச் செய்தாலும், தவறினாலும் உன்னுடைய ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படும்.

ஒருவரையொருவர் நேசியுங்கள், ஒளிவு மறைவு இல்லாமல் இருங்கள், உங்கள் திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்பட்டது.

என்றாலும் உங்கள் வாழ்க்கையில் போராட்டமான சூழ்நிலைகளும் வரப்போவதை நான் காண்கிறேன்.

ராஜ குடும்பத்தைவிட மெர்க்கலின் குடும்பம் குறித்த செய்திகள் அதிகம் அடிபடும். குடும்பத்து வெளியே இருந்தும் வரும் அச்சுறுத்தல்கள் உங்களை பிரிக்க முயலும்.

என்றாலும் நான் ஒரு தேவதையைப்போல உங்களுடனேயே இருந்து நீங்கள் மேற்கொள்ளும் எல்லா தொண்டுகளிலும் உதவியாக இருப்பேன்.

உங்களுக்கு குறைந்தது இரண்டு குழந்தைகள் பிறக்கும், நீங்கள் அவர்களுக்கு அன்புள்ள மற்றும் நல்ல பெற்றோராக இருப்பீர்கள் என்றும் டயானா தெரிவித்ததாக Terry மற்றும் Linda Jamison இருவரும் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்தி, தாங்கள் சொல்ல விரும்புவதை எழுதுவார்கள், அப்படித்தான் டயானாவும் தங்களிடம் இந்த விடயங்களையெல்லாம் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers