ஸ்காட்லாந்தில் நடந்த பயங்கர விபத்து! நான்கு பிள்ளைகளின் தாய் எப்படி இறந்தார்? வெளியான வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

டிரைவரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக விபத்தில் சிக்கி இறந்த நான்கு பிள்ளைகளின் தாய் யோவான் பிளாக்மேனின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Dumfries பகுதியில் உள்ள சாலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் David Shields(34) என்ற நபர் ட்ரக்கில் தன்னுடைய மொபைல் போனை பயன்படுத்தியவாறே, எதிரே இருக்கும் வாகனத்தை கண்டு கொள்ளாமல் ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு டிராபிக் காரணமாக வாகனங்கள் நின்று கொண்டிருப்பதை இவர் கவனிக்காமல் ஓட்டியதால், முன்னே இருந்த Toyota Yaris காரின் மீது பயங்கரமாக மோதியுள்ளார்.

இதனால் காரில் இருந்த Yvonne Blackman(66) என்ற பெண் பரிதாபமாக பலியானர், அவருக்கு நான்கு பிள்ளைகள் மற்றும் பேரன்- பேத்திகள் உள்ளனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில் டிரைவரின் அஜாக்கிரதையால், Yvonne Blackman பரிதாபமாக இறந்ததால், David Shields-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதுடன் ஏழரை ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அந்த விபத்து எப்படி நடந்தது, சுமார் 18 நொடிகளுக்குள் இந்த விபத்து நடந்துவிட்டதாக கூறி, அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

மனைவியை பறிகொடுத்து நிற்கும் Ralph-வும் ஒரு டிரைவர் தான், அவர் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், நானும் ஒரு டிரைவர் தான், வாகனம் ஓட்டும் போது தயவு செய்து யாரும் போன் பயன்படுத்தாதீர்கள்.

அப்படி பயன்படுத்தும் போது விபத்து ஏற்பட்டுவிட்டால், அந்த குடும்பத்தின் நிலையை நினைத்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers