இளவரசி கேட்டுக்கு என்மீது பொறாமை: யார் சொன்னது தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசியான கேட்டுக்கு என்மீது பொறாமை என அவரது கணவரும் பிரித்தானிய இளவரசருமான வில்லியம் கூறி இருக்கிறார்.

தனியாக ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் வில்லியம் மற்ற விருந்தினர்கள் முன்பு உரையாற்றும்போது, இந்த வாரம் தன் மனைவி இது வரை செய்திராத ஒரு விடயத்தை செய்யவிருப்பதாகவும் அதைக் குறித்து கேட்டுக்கு பொறாமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்படி இளவரசி கேட் பொறாமைப்படும் அளவில் வில்லியம் என்ன செய்யப்போகிறார்?

குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் பல நாட்கள் தொடர்ந்து நிம்மதியாக தூங்கப்போகிறாராம் இளவரசர் வில்லியம் அவ்வளவுதான்.

எனது அருமைக் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் தூங்கப்போகிறேன் என்று இளவரசர் கூறுவதைப் பார்த்தால் குட்டி இளவரசர்கள் அம்மாவையும் அப்பாவையும் ரொம்பத்தான் படுத்தி எடுக்கிறார்கள் போல இருக்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers