லண்டன் வீதியில் நிலைதடுமாறிய வாகன ஒட்டி: தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் போக்குவரத்து நெரிசலின் போது சாலையை கடக்க முயன்ற இளம்பெண்ணை, இருசக்கர வாகன ஒட்டி ஒருவர் வேகமாக மோதும் காட்சி வெளியாகியுள்ளது.

லண்டன் நகரின் Blackfriars Bridge பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது இருசக்கர வாகன ஒட்டி, கிடைக்கும் சிறிய வழியை பயன்படுத்தி வேகமாக முன்னே செல்ல முயல்கிறார்.

அவ்வாறு வேகமாக செல்லும்போது, திடீரென ஒரு இளம்பெண் சாலையின் குறுக்கே ஓடிவர, வாகனம் அவர்மீது பலமாக மோதுகிறது.

இதில் இருவருமே நிலைகுலைந்து கீழே விழுகின்றனர்.

இந்த சம்பவமானது வாகன ஒட்டி வைத்திருந்த காமிராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து கூறியுள்ள வாகன ஒட்டி, இந்த விபத்தில் அதிஷ்டவசமாக இருவருக்கும் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

கீழே விழுந்ததும் அங்கிருந்த பாதசாரிகள் அனைவரும் வேகமாக எங்களுக்கு உதவ முன்வந்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்