கத்திகொண்டே மாடியிலிருந்து நிர்வாணமாக குதித்த மாணவி: அதிர்ச்சியடைந்த பாதசாரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா
122Shares

ஸ்காட்லாந்தை சேர்ந்த மாணவி ஒருவர், போதையில் நிர்வாணமாக மாடியிலிருந்து குதித்ததால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவருடைய சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் The Glasgow Caldeonian பல்கலைகழகத்தில் ஃபேஷன் துறையில் பயின்று வருபவர் Alix Taylor. இவர் கடந்த வியாழக்கிழமையன்று தன்னுடைய நண்பர்களுடன் கேளிக்கை விடுதிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அதிகமான போதை மருந்தினை எடுத்துக்கொண்ட Alix, திடீரென அழ ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து Alix-ஐ அறைக்கு அழைத்து சென்ற தோழிகள், படுக்கை அறையில் உறங்க வைத்துவிட்டு அவர்களும் உறங்க சென்றுவிட்டனர்.

அடுத்த ஒருமணி நேரம் கழித்து படுக்கையிலிருந்து எழுந்த Alix, அறையின் ஜன்னலில் நிர்வாணமாக நின்று கொண்டு சத்தமிட்டுள்ளார்.

தரையில் நடந்த சென்ற ஒருவர் இதனை பார்த்துவிட்டு, யாரோ வலுக்கட்டயமாக பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயற்சிக்கின்றனர் என நினைத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் பொலிஸார் வருவதற்குள்ளாகவே Alix, மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவரது தலைப்பகுதி தரையில் வேகமாக மோதியதால் தலை உடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. காதிலிருந்து வேகமாக ரத்தம் வெளியேற ஆர்ம்பித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு எலிசபெத் மகாராணி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தங்கையின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள Ellie Taylor, போதை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்