கிரீசில் உடைகள் களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட பிரித்தானிய இளம்பெண்கள்: விளையாட்டு வினையான சோகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கிரீசுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பிரித்தானிய இளம்பெண்கள் விளையாட்டாக செய்த ஒரு காரியம் விபரீதமாக முடிந்தது.

பிரித்தானியாவின் Essexஐச் சேர்ந்த Shona Cox மற்றும் Vicki Albone ஆகிய இளம்பெண்கள் கிரீசுக்கு சுற்றுலா சென்றபோது ஒரு கூட்டம் ஆண்கள் அவர்களுக்கு நண்பர்களானார்கள்.

அவர்களுடன் விளையாட்டாக பொழுதைக் கழித்த இருவரும், அந்த ஆண்கள் குளிக்கச் சென்றபோது அவர்களில் ஒருவரின் உடைகளை எடுத்து ஒளித்து வைத்து விட்டார்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் அறைக்கு திரும்பிய சிறிது நேரத்தில் பொலிசார் வந்து கதவைத் தட்டினார்கள்.

கிறிஸ்டோபர் என்னும் ஒருவனின் வாட்ச் மற்றும் உடைகளை திருடிவிட்டதாக பொலிசாரிடம் அவன் புகாரளித்ததின்பேரில் பொலிசார் வந்து திருடிய பொருட்களை திரும்பக் கொடுத்து விடுமாறு கேட்டனர்.

தாங்கள் எதையும் திருடவில்லை என்று கூறியும், அறை முழுவதும் சோதனையிட்டு எதுவும் கிடைக்காத நிலையிலும் அவர்கள் பொலிஸ் வேனுக்குள் தூக்கி வீசப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களது உடைகள் அகற்றப்பட்டு அவர்கள் சோதனையிடப்பட்டனர். மோசமான நாற்றமெடுக்கும் ஒரு அறையில் தங்கச் செய்யப்பட்ட அவர்கள் பின்னர் ஒரு வழியாக ஒரு வழக்கறிஞரைக் கண்டுபிடித்தனர்.

ஒரு வேளை மட்டும் உணவு, மோசமான தண்ணீர், நாற்றமெடுக்கும் அறை, உடை களையப்பட்ட அவமானம் என சுற்றுலா சென்ற இரண்டு பெண்களும் எதையெல்லாம் அனுபவிக்கக்கூடாதோ அத்தனையும் அனுபவித்துள்ளனர்.

தற்போது வழக்கறிஞர் மூலம் வழக்கை சந்தித்து வரும் அவர்கள், கிரீஸ் நல்ல இடம்தான், ஆனால் உதவி தேவை என்று வரும்போது உதவ யாரும் இருக்கமாட்டார்கள், கவனம் என எச்சரிக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்