ஆசைக்கு இணங்க மறுத்த பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானியப் பெண் ஒருவர் புதிதாக சந்தித்த ஒரு நபரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்து சிதைக்கப்பட்ட கோர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த Emma Higginson (35) தனது தோழியுடன் துருக்கிக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கு Declan Marshall (27) என்னும் நபரை சந்தித்தார்.

அவர்களுடனே சுற்றிய Declan, தனக்கு இரவு தங்க இடமில்லை என்று கூறியதால், Emma அவனை தனது அறையிலேயே உள்ள சோஃபாவில் தூங்கிக் கொள்ளலாம் என்று அனுமதியளித்தார்.

இரவு திடீரென கண் விழித்த Emma, Declan தனது படுக்கையில் தனக்கு அருகில் படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனது ஆசைக்கு இணங்குமாறு Declan அவரை வற்புறுத்த, தனக்கு ஏற்கனவே காதலர் இருப்பதாகக் கூறி மறுத்திருக்கிறார் Emma.

அவ்வளவுதான் Emmaவுக்கு தெரியும். மீண்டும் அவர் கண் விழித்தபோது, இரத்த வெள்ளத்தில் தான் கிடப்பதை உணர்ந்தார்.

அவர் மண்டை உடைந்திருந்தது, பலத்த காயமடைந்திருந்த அவரை அவராலேயே அடையாளம் காண இயலாத அளவுக்கு அவர் சிதைக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Emmaவுக்கு 50 தையல்கள் போடப்பட்டன.

அவரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ள Declan அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்