பிரித்தானியாவில் பேருந்து பணிமனையை பார்வையிட்ட தமிழக அமைச்சர்

Report Print Kabilan in பிரித்தானியா

பிரித்தானியா சென்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், லண்டனில் உள்ள பேட்டரி பேருந்து பணிமனையை பார்வையிட்டார்.

தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னையில் விரைவில் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதற்கு முதற்கட்டமாக 100 பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரித்தானியாவுக்கு பயணம் செய்தார்.

அங்கு பேட்டரி பேருந்து சேவைகள் தொடர்பாக, லண்டனில் பேட்டரி பேருந்துகளை இயக்கும் சி-40 நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் பேட்டரி பேருந்துகளை இயக்கலாம் என்று அப்போது ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், லண்டன் பேட்டரி பேருந்து பணிமனையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பேட்டரி பேருந்துகள் செயல்படும் விதம் குறித்து அறிந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், போக்குவரத்து துறையின் முக்கிய அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழிலதிபர்களையும் அவர் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்