புதுமணதம்பதியினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிரித்தானிய பிரதமர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர் தெரசா மே புதுமணதம்பதியினரின் அழைப்பை ஏற்று அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

Jason மற்றும் Michelle Dight தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு Isle of Wight தீவில் அமைந்துள்ள கடற்கரையில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்கள் எதிர்பாரதவிதமாக தீவினை பார்வையிட வந்த பிரித்தானிய பிரதமர் தெரசா மே தனது பாதுகாவலர்களுடன் வந்துள்ளார். அவரை பார்த்ததும் புதுமணதம்பதியினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக, பாதுகாவலர்களிடம் சென்று பிரதமருடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தங்கள் ஆசையை தெரியப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், கடற்கரைக்கு அணிந்து செல்லும் ஆடையில் வந்துள்ளேன், திருமண நிகழ்வு என்பதால் புகைப்படம் வேண்டாம் என ஆரம்பத்தில் அன்போடு தயங்கிய பிரதமர், பின்னர் மணமக்களின் அன்பான கோரிக்கையை ஏற்று அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்