குழந்தை பெற்றெடுத்த பிரித்தானியாவின் முதல் ஆண்: மார்பகம் விடயத்தில் செய்த அதிரடி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெயருக்கு சொந்தகாரரான ஹைடன் கிராஸ் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.

22 வயதான ஹைடன் பிறக்கும் போது பெண்ணாக பிறந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஆணாக மாறும் சிகிச்சையை மேற்கொண்டார்.

இதையடுத்து கடந்தாண்டு பேஸ்புக் நண்பர் ஒருவரின் விந்தணுவை தனது உடலில் செலுத்தி கொண்டு அதன் மூலம் கர்ப்பமானார் ஹைடன்.

பின்னர் அழகான பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்து பிரித்தானியாவில் குழந்தை பெற்றெடுத்த முதல் ஆண் என்ற பெருமையை பெற்றார்.

இந்நிலையில் தனது மார்பகத்தை அகற்றும் அறுவை சிகிச்சையை ஹைடன் தற்போது மேற்கொண்டு வருவதாக அவரே தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட சிகிச்சை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் £19k செலவிலான இறுதிக்கட்ட அறுவை சிகிச்சையை அடுத்தாண்டு செய்துகொள்ளவுள்ளார் ஹைடன்.

இது குறித்து ஹைடன் கூறுகையில், எனக்கு கிட்டத்தட்ட முழுமையான வாழ்க்கை அமைந்துள்ளது.

அழகான குழந்தைக்கு தந்தையாகியுள்ளேன், இறுதியான அறுவை சிகிச்சை முடிந்துவிட்டால் என்னை நான் முழுவதுமாக உணர்வேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்