பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன் திருமணத்திற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம்சை திருமணம் செய்து கொள்வத்ற்கு முன் ஒரு சாதாரண பெண்ணாகத் தான் காணப்பட்டார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவரான கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம்சுடன் டேட்டிங் செல்லும் போது சாதரண பெண்ணாக பார்க்கப்படவில்லை. ஏனெனில் அவர் இளவரசர் வில்லியம்சுடன் டேட்டிங் சென்ற போது, அது தொடர்பான அனைத்து தகவல்களும் அப்போது ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகின.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று திருமணத்திற்கு முன் கேட் மிடில்டன் எப்படி இருந்தார் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2007-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி லண்டனில் இரவு நேரத்தில் காரில் சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் அதிகம் வெளியில் செல்லும் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இரவு நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்றுள்ளார்.

அவரின் சகோதரி பிபாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

லண்டனில் இருக்கும் Mahiki Bar மிடில்டனுக்கும் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதிகமாக இரவு நேரங்களில் இங்கு வரும் மிடில்டனின் 2007-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதே சமயம் 2006-ஆம் ஆண்டு ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்பிய மிடில்டன்.

வேலைக்காக 2005-ஆம் ஆண்டு இண்டர்வியூ சென்ற போது...

மிடில்டனுக்கு விம்பிள்டன் எவ்வளவு பிடிக்குமோ அதே போன்று ரேஸ் அதிகம் பிடிக்குமாம், அப்படி 2008-ஆம் ஆண்டு ஹரி மற்றும் வில்லியம்சின் நண்பரான Thomas-வுடன் அவர் Cheltenham Festival-லில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இளவரசர் வில்லியம்ஸ் போலோ விளையாட்டு விளையாடுவார். அந்த வகையில் அவருடையை விளையாட்டை ரசிக்க வந்த போது எடுக்கப்பட்டது.

வில்லியம்ஸ் மற்றும் மிடில்டன் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொண்ட புகைப்படம். இது வில்லியம்ஸ் விளையாடி முடித்த பின்பு எடுக்கப்பட்டது எனவும் போட்டி கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் திகதி Eton கல்லூரியில் நடைபெற்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

மிடில்டன் University of St Andrews-ல் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார். அப்போது தான் இவர் இளவரசர் வில்லியம்சை பார்த்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers