ரத்தம் சொட்ட சொட்ட கடுமையாக தாக்கி கொண்ட இளைஞர் பட்டாளம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய சாலையில் இரு குழுக்களை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர், கையில் கட்டை மற்றும் சில ஆயுதங்களை கொண்டு கொடூரமாக தாக்கி கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் Luton பகுதியில் இயங்கி வரும் கடை ஒன்றிற்கு வெளியே நேற்று இரவு, 10 முதல் 20 வயதுள்ள இளைஞர்கள் சிலர், கையில் கட்டைகள் மற்றும் மட்டைகளை கொண்டு கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிலர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், படுகாயங்களுடன் கிடந்த 7 இளைஞர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு இளைஞரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், இரண்டு குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் உடல்களில் இருந்து ரத்தம் வெளியேறி கொண்டே இருந்தது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் சண்டையிட்டு கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...