பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய பதவி: இதற்குமுன் அந்த பதவியிலிருந்தவர் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசரான ஹரிக்கு Royal Marines எனப்படும் ராணுவ படைப்பிரிவின் கேப்டன் ஜெனரல் என்னும் மிகப்பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்குமுன் அந்த பதவியை வகித்தவர் பிரித்தானிய மகாராணியான எலிசபெத்தின் கணவரான பிலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

64 ஆண்டுகளாக பதவி வகித்த இளவரசர் பிலிப் அந்த பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இளவரசர் ஹரிக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப் பதவி ஓய்வு பெறும் நாளில், நீங்கள் பதவியிலிருந்து ஓய்வு பெறுவது வருத்தமாக இருக்கிறது என்று கூறியபோது அவர், என்ன செய்வது என்னால் தொடர்ந்து நிற்க முடியவில்லை அல்லவா என்று வேடிக்கையாக தெரிவித்தார்.

இன்று இளவரசர் ஹரி கேப்டன் ஜெனரலாக பதவியேற்றபின் முதன் முறையாக படை வீரர்களை சந்தித்தார்.

ராணுவ கடற்படை விமானத்தில் வந்திறங்கிய இளவரசர் ஹரிக்கு முறைப்படி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers