சாதிக்க வந்த இடத்தில் பிரித்தானியா பெண் செய்த நெகிழ்ச்சி செயல்! வெளியான புகைப்படத்தால் குவியும் பாராட்டு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாரத்தான் போட்டியின் போது, தன்னுடைய குழந்தைக்கு தாய் பால் கொடுத்தது குறித்த புகைப்படம் வெளியாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்தவர் Sophie Power(36). இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு மாராத்தான் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு ஆர்வமாக இருந்தார்.

ஆனால் அப்போது கர்ப்பமாக இருந்ததால், இவரால் அந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் Ultra trail of Mont-Blanc என்ற மாராத்தான் போட்டியில் கலந்து கொண்டார். சுமார் 107 மைல் தூரம் ஓடிய இவர், தனக்கு கிடைத்த இடைவெளியின் போது, தன்னுடைய மூன்று மாத மகனான கோர்மார்கிற்கு தாய் பால் கொடுத்துள்ளார்.

அதில் ஒன்றில் தாய் பாலும் மற்றொன்றில் தாய் பால் பிடித்து வைத்து கொள்ள பயன்படுத்தபடும் Breast Pump-ஐ பயன்படுத்தியுள்ளார்.

இவர் குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலானதால், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தான் ஒரு தாயின் குணம் என்று கருத்தை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers