தாலி கட்டுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்னர் இறந்த மணப்பெண்: கதறிய புதுமாப்பிள்ளை

Report Print Raju Raju in பிரித்தானியா
317Shares
317Shares
ibctamil.com

பிரித்தானியாவில் திருமணம் ஆகவிருந்த நிலையில் மணப்பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனி கேமரான் (32) என்ற பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவரை பிரிந்த ஜெனி, பிரான்ஸிஸ் என்பவரை காதலித்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருந்தது.

ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெனி கடந்த யூலை மாதம் அதிலிருந்து மீண்டார்.

ஆனால் மீண்டும் சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. இந்நிலையில் தான் ஜெனிக்கு, பிரான்ஸிசுடன் திருமண ஏற்பாடு நடந்தது.

சரியாக திருமணம் நடக்க சில மணி நேரங்களே இருந்த நிலையில் ஜெனி திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து பிரான்ஸிஸ் கதறி அழுதார். அவர் கூறுகையில், என் உயிராக ஜெனி இருந்தார்.

புற்றுநோயை எதிர்த்து அவர் தைரியமாக போராடினார். இனி நோயால் ஏற்படும் வலியை அவர் பொருத்து கொள்ள தேவையில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்