பிரித்தானியாவில் உறவே வைத்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொண்ட ஆச்சரிய ஜோடி! எப்படி தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண் மற்றும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் இருவரும் உறவே வைத்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Northumberland பகுதியைச் சேர்ந்த ஜோடி Kerry Allen-Ali Thomson. கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த ஜோடி ஒரு உணவகத்தில் சந்தித்துள்ளனர்.

இதில் Kerry Allen குடும்ப வாழ்க்கையில் அதிகம் அடிபட்டதால், அவருக்கு திருமணத்தில் அதிக உடன்பாடு இல்லாமல் இருந்துள்ளது.

Ali Thomson ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், அவரை திருமணம் செய்யவும் விரும்பவில்லை. இருப்பினும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

அப்போது இது குறித்து இணையத்தில் பல தேடியுள்ளனர். அப்போது தான் turkey baster method என்ற முறையின் மூலம் குழந்தை பெற்றெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு 3 பவுண்ட்டில் ஊசி ஒன்றை ஆமேசானில் வாங்கியுள்ளனர். அதன் பின்னர் Tupperware box-ஐ Morrisons சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியுள்ளனர்.

அதன் பின் ஊசியில் எடுக்கப்பட்ட Ali Thomson-னின் விந்தணு, Kerry Allen-னின் முக்கிய பகுதியில் செலுத்தப்பட்டுள்ளது. இப்படி நான்கு முறை செய்த போது அவர் கர்ப்பமடையவில்லை.

இதைத் தொடர்ந்து ஐந்தாவது முறை இதை செய்த போது தான் Kerry Allen கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அந்த குழந்தையும் வயிற்றில் 5 மாதம் இருந்த போது இதயத்துடிப்பு நின்று இறந்துவிட்டது.

இருப்பினும் இவர்கள் கடைசியாக மீண்டும் இதே முறையை செய்துள்ளதான் பயனாக கடந்த மே மாதம் 23-ஆம் திகதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த பெண் குழந்தை தொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்