லண்டனில் மனைவியை கொலை செய்த கணவர் நாடு கடத்தல்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் மனைவியை கொலை செய்த இந்தியர் 8 ஆண்டுகளுக்கு பின்னர், பிரித்தானிய சிறை சட்டத்தின்படி இன்று நாடு கடத்தப்பட உள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த Harpreet Aulakh (35) - Geeta Aulakh (28) தம்பதியினர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

Geeta லண்டனில் உள்ள ஆசிய சூரிய ஒளி வானொலி நிலையத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.

Geeta கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி பள்ளியிலிருந்து மகன்களை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது Sher Singh (19) Jaswant Dhillon (30) என்ற இரண்டு பேர் திடீரென வாளால் Geeta மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்களின் தாக்குதலை தடுக்க முற்பட்டபோது Geeta-வின் கை துண்டாகி கீழே விழுந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த Geeta-வை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலை பகுதியில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்தால் அடுத்த 30 நிமிடத்திலேயே Geeta சிகிச்சை பலனின்றி பலியானர்.

பிரித்தனியா ஊடங்கங்கள் அனைத்திலும் தாளிப்பு செய்தியாகி வந்த ஈச்சம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, Geeta-வின் கணவர் Harpreet-ஐ கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வாக்குவாதம் நடந்து வந்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Harpreet-க்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பிரித்தானிய சிறையில் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது Harpreet இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் ஐஜி கூறுகையில், பிரித்தனியா பொலிஸார் குற்றவாளியை 3 பேர் கொண்ட இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் டெல்லி விமான நிலையத்தை அடைந்தவுடன் குற்றவாளி பஞ்சாப் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்