தேனிலவு சென்ற இடத்தில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில், உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த Leigh Hall (29), தன்னுடைய காதலி Matthew-வை திருமணம் செய்வதற்காக, £3,750 பவுண்ட்ஸ் செலவில் கரீபியன் கடற்கரை பகுதியில் ஹோட்டல் அறையினை முன்பதிவு செய்துள்ளார்.

இருவரும் தங்களுடைய திருமண நிகழ்விற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 24 பேரை மட்டுமே அழைத்திருந்தனர். அன்றைய தினம் திருமணம் முடிந்த பின்னர் இருவரும் ஏராளமானாம் புகைப்படங்களை எடுத்துவிட்டு தங்களுடைய அறைக்கு சென்றுள்ளனர்.

பின்னர் இருவரும் தங்களுக்கு பிடித்தமான கடற்கரையில் தேனிலவை கொண்டாட கிளம்பும்போது, Matthew-விற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. பாத்ரூம் சென்ற அவருக்கு, வயிற்றுபோக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் என அடுத்தது சோகமான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட Matthew-வை உடனையாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு 3 மணிநேரமாக அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து Matthew கூறுகையில், Thomas Cook உணவகத்தை பதிவு செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர்களின் பதிவுகளை பார்த்தேன்.

அதில் ஓரு சிலர், உணவகத்தில் salmonella பாக்டீரியா தாக்குதல் இருப்பதாக பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் உணவகத்திற்கு போன் செய்து கேட்டபோது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

நாங்கள் வாடிக்கையாளர்களை நன்றாக கவனித்து வருகிறோம் என கூறியிருந்தனர். ஆனால் எனக்கு நடந்துள்ளதை வைத்து பார்த்தால், ஒருவேளை பாக்டீரியா தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் எந்த காரணமும் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்