மாணவர்களுடன் நடனம் ஆடிய பிரித்தானிய பிரதமர்: வைரலாகும் வீடியோ

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பிரதமர் தெரசா மே, பள்ளி மாணவர்களுடன் இணைந்து நடனமாட முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரசா மே, வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதற்காக தென் ஆப்பிரிக்கா, கென்யா மற்றும் நைஜீரியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

12 மணி நேர பயணத்திற்கு பின்னர், தென் ஆப்பிரிக்கா வந்தடைந்த தெரசா, Cape Town-ல் உள்ள I. D. Mkize Sen பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சென்றார்.

அங்கு மாணவர்கள் தங்களுடைய பாரம்பரிய நடனத்துடன் பிரதமருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்பொழுது மாணவர்களுடன் சேர்ந்து பிரதமரும் நடனமாட முயற்சித்தார்.

இதனையடுத்து மாணவர்களின் பேசிய பிரதமர், என்னை வரவேற்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்ட அனைத்து இளைஞர்களுக்கும் நான் நன்றி சொல்ல நினைக்கிறன் என கூறினார்.

மேலும், நீங்கள் யாராவது பல்கலைகழகம் சென்று படிக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால், பெரிய பல்கலைகழகங்களில் ஒன்றான இங்கிலாந்து பல்கலைகழகத்திற்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.

ஆனால் இத்துடன் பிரதமர் விட்டுவிடவில்லை. அதன் பிறகும் மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்