பிரித்தானியாவில் ரத்தவெள்ளத்தில் கிடந்த தாய், மகள் வழக்கில் அதிரடி திருப்பம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் நேற்று கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாய் வழக்கில் அதிரடி திருப்பமாக பொலிஸாரின் அலட்சியமே கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் Birmingham அருகே Solihull பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு(பிரித்தானிய நேரப்படி), இரண்டு பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது 22 வயதான Raneem Oudeh மற்றும் அவரது தாய் Khaola Saleem (49) என்பது தெரியவந்தது.

மேலும் இந்த கொலையை செய்தது, Raneem-ன் முன்னாள் காதலன் Janbaz Tarin (21) என பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவையே உலுக்கிய இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்வோம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளி Khaola ஆப்கனிஸ்தானை பூர்விகமாக கொண்டவர் எனவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் இதுகுறித்து பக்கத்து வீட்டார் ஒருவர் கூறுகையில், Raneem-ன் முன்னாள் காதலனால் தங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என அவருடைய அம்மா அடிக்கடி என்னிடம் கவலை தெரிவிப்பார்.

சமீபத்தில் அவர்கள் பிரிந்ததும், பொலிஸாருக்கு கூட போன் செய்து தகவல் கொடுத்தனர். ஆனால் பொலிஸார் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Raneem நல்ல குணமுடையவர். அவரிடம் நான் சில முறை பேசியுள்ளேன். அவர்கள் சிரியாவை சேர்ந்தவர்கள் என நினைக்கிறேன். 17 முதல் 18 வருடங்களாக அவர்கள் பிரித்தானியாவில் தான் வசித்து வருகின்றனர்.

வெள்ளை நிறத்திலான கார் ஒன்று அவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி வருவதை நான் பார்த்திருக்கிறேன். அந்த காரில் வரும் ஒரு ஆணுடன் Raneem பேசிக்கொண்டிருந்தும் நான் பார்த்துள்ளேன்.

அவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது கூட Raneem கர்ப்பிணியாக இருக்கிறாளோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்