ராஜ குடும்பத்திலேயே பிரபலமானவர் யார் தெரியுமா? நிச்சயம் உங்களால் கணிக்க முடியாது

Report Print Balamanuvelan in பிரித்தானியா

சமீப காலமாக பத்திரிகைச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர் என்ற விதத்தில் பெரும்பாலானோர் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்கல்தான் ராஜ குடும்பத்திலேயே பிரபலமானவர் என்று எண்ணலாம்.

ஆனால் ராஜ அரண்மனையின் பணியாளர்களிடையே இன்னொருவர் மிகப் பிரபலமாக இருந்து வருகிறார்.

அவர் பிரித்தானிய ராணியார் எலிசபெத்தின் கணவர் பிலிப்தான் என்றால் நம்ப முடிகிறதா? தொலைக்காட்சி தொடர் ஒன்றில் இளவரசர் பிலிப் ஆக நடிக்கும் Matt Smith பேட்டி ஒன்றின்போது இந்த ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

ராஜ அரண்மணைப் பணியாளர்கள், 97 வயதான இளவரசர் பிலிப்பை அவ்வளவு விரும்புகிறார்களாம்.

இந்த தொலைக்காட்சித் தொடருக்காக அவரைக் குறித்த தகவல்களை சேகரிக்கும்போதுதான் அவர் எவ்வளவு புத்திசாலி, அறிவுபூர்வமாக வேடிக்கையானவர், எவ்வளவு பிரபலமானவர் என்பது எனக்கு தெரிய வந்தது என்கிறார் Matt Smith.

அரண்மனைப் பணியாளர்கள் யாரிடம் நீங்கள் பேசினாலும் அவர்கள் உண்மையாக நேசிக்கும் ஒரு நபர் பிலிப்தான், அவரை மக்களில் ஒருவராகப் பார்க்கிறார்கள் அவர்கள் என்கிறார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்