20 ஆண்டுகளாக சிக்கனை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த அதிசய வாலிபர்: 20 நிமிடத்தில் நடந்த மாற்றம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இங்கிலாந்தை சேர்ந்த 21 வயது வாலிபர் Ryan Howarth என்பவர் Selective Eating Disorder எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே தெரிவு செய்து சாப்பிடும் பழக்கம். இவர் 4 வயதில் இருந்தே சிக்கன் மற்றும் சிப்ஸ் ஆகிய இரண்டினை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.

ஆனால், இவரது உடல்நலம் எதுவும் பாதிக்கப்படவில்லை. இவருக்கு சிக்கனை உணவினை தவிர பிற உணவுகளை சாப்பிட்டால் அது மிகவும் வித்தியாசமான சுவையாக இருந்துள்ளதோடு மட்டுமல்லாமல் அந்த சுவை இவருக்கு பிடிக்கவில்லை.

இவரது தாய் ஒருமுறை காய்கறிகளை சாப்பிட கொடுத்ததற்கு அது சுவையில்லை என கூறி சாப்பிட மறுத்துள்ளார். இதனால் தனது மகனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிடுமோ என கவலையடைந்த தாய், தனது மகன் எப்படியாவது பிற உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி, தொடர்ந்து வேறு உணவுகளை சாப்பிட கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20 வருடங்களாக கடைபிடித்து வந்த பழக்கத்தை, நேற்று 20 நிமிடத்தில் சாப்பிட்ட பழங்கள் மூலமாக சற்று தனது உணவு பழக்கத்தை மாற்ற ஆரம்பித்துள்ளார்.

இவரது, தாய் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அதனை எடுத்துக்கொண்டு தனியறையில் அமர்ந்து மெதுமெதுவாக அதனை சாப்பிட ஆரம்பித்துள்ளார். சுமார் 20 நிமிடங்கள் இதனை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதன் சுவை இவருக்கு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தற்போது, பிற உணவுகளையும் சாப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்