கர்ப்பிணி மனைவியை ஏமாற்றி அவர் தங்கையுடன் உறவு கொண்ட கணவன்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது தங்கை முறை உறவுக்கார பெண்ணுடன் கணவர் தவறான தொடர்பு வைத்திருந்ததை கண்டுப்பிடித்த மனைவி வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.

Wolverhampton நகரை சேர்ந்தவர் கிரைக் (31). இவர் மனைவி சார்லோட் மெக்டவுகல் (26). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் சார்லோட் மூன்றாம் முறையாக கர்ப்பமாக ஆனார்.

இந்நிலையில் தனது தங்கை உறவுமுறையான கேட்டி கார்ட்ரைட் (21) என்பவருடன் தனது கணவர் கிரைக் நெருக்கம் காட்டுவதை சார்லோட் கண்டுப்பிடித்தார்.

போன் பில் அதிகமாக வருவதை கண்டுப்பிடித்த சார்லோட், கிரைக் அதிகமாக கேட்டியுடன் பேசியதை உறுதி செய்தார்.

பின்னர் கிரைக் தினமும் இரவு தாமதமாக வீட்டுக்கு வருவதையும் அருகில் உள்ள கேட்டி வீட்டுக்கு அவர் செல்வதையும் சார்லோட் கண்டுப்பிடித்தார்.

இது குறித்து கூறிய சார்லோட், கிரைக் என் கணவர், ஆனால் கேட்டி என் ரத்த உறவு, அவர் இப்படி துரோகம் செய்வார் என நான் நினைக்கவில்லை.

தற்போது கிரைக் முழு நேரமும் கேட்டியுடன் தான் வசித்து வருகிறார் என வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கேட்டியுடன் பழக தொடங்கியவுடன், கிரைக் சார்லோட்டை விட்டு பிரிந்துவிட்டதாக அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்