பிரித்தானியாவை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளியின் புகைப்படம் வெளியானது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் Solihull நகரில் தாயார் மற்றும் மகள் என இரட்டைக் கொலை வழக்கில் தேடப்படும் சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் Janbaz Tarin என்ற 21 வயது இளைஞரை தேடி வருவதாக, அவரது புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்கள் உதவும்படி பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொல்லப்பட்ட இளம்பெண் Raneem Oudeh-ன் முன்னாள் காதலரே இந்த Janbaz Tarin எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை உலுக்கிய இந்த இரட்டைக் கொலை வழக்கில் ஒட்டுமொத்த பொலிசாரும் குறித்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவரை கைது செய்ய முடியாமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

பிரித்தானியாவின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள Solihull நகரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் இருந்து உள்ளூர் நேரப்படி சுமார் 12.30 மணியளவில் பொலிசாருக்கு கொலை சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த தாயார் மற்றும் மகளை கண்டெடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டது 22 வயதான Raneem Oudeh மற்றும் அவரது தாயார் 49 வயதான Khaola Saleem எனவும் தெரியவந்தது.

பொலிசாரால் தற்போது தேடப்பட்டுவரும் Janbaz Tarin-ன் முன்னாள் காதலியே கொல்லப்பட்ட Raneem Oudeh என கூறப்படுகிறது.

அதிகாலை நடந்த இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் தேடப்படும் இளைஞர் Tarin தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்