பிரித்தானியாவில் அரங்கேறிய மோசமான கார் விபத்து: இருவர் பலி.. 3 பேர் கவலைக்கிடம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

அயர்லாந்தில் ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததோடு, கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தின் Bundoran பகுதியில் கடந்த 19-ம் தேதியன்று Peugeot 306 என்ற காரில் பயணம் செய்துள்ளனர். அதிவேகத்தில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த விளக்கு கம்பத்தில் மோதி சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தில் Rachel Elliott (25) என்ற பெண் அப்பகுதியில் உள்ள சுவர் ஒன்றில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அதேசமயம் சம்பவ இடத்திலேயே 20 வயதான Shiva Devine மற்றும் Conall McAleer என்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த மற்ற இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியதோடு, காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த Rachel-ஐ ஹெலிகாப்டர் மூலம் Dublin's Beaumont மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் Rachel கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவரது இடுப்பு மற்றும் மூளை பகுதியில் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், அவருடைய சகோதரி டோனா தன்னுடைய முகநூல் பக்கத்தில், Rachel கண்களை திறந்து விட்டார். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யாரும் கவலைபட வேண்டாம் அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்