கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்பப்பட இருந்த மொடல் அழகி தப்பியது எப்படி: திகில் சம்பவம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மொடல் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அடிமையாக விற்கப்பட இருந்த நிலையில் அவர் ஒரு குழந்தைக்கு தாயானவர் என்ற உண்மை தெரிய வந்ததால் தப்பிப் பிழைத்த திகில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி Chloe Ayling. இத்தாலியின் Milan என்ற நகரில் கடத்தப்பட்ட அவர் ஆறு நாட்கள் ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

அவரைக் கடத்தியவர்கள் அவருக்கு போதை மருந்து கொடுத்து அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் dark web எனப்படும் சட்ட விரோத இணையத்தில் அவரை பாலியல் அடிமையாக விற்பதற்காக விளம்பரம் செய்வதற்காக அந்த புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர்.

Lukasz Herba என்பவன் அவளை விற்பதற்காக ஏலம் விடப்படும் இடம், அவளது உடல் அளவு, வயது போன்ற விவரங்களுடன் விளம்பரம் செய்துள்ளான்.

அவளது ஆரம்ப விலையாக 224,000 பவுண்டுகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இத்தாலியில் கடத்தப்பட்ட Chloe Aylingஐத் தெரியுமா? அவள் இப்போது விற்பனைக்கு தயாராக இருக்கிறாள் என்று கூறியது அந்த விளம்பரம்.

பின்னர் ஒரு கட்டத்தில் Chloe Ayling திருமணமானவள் இரண்டு வயது குழந்தைக்கு தாய் என்பது தெரிய வந்ததும் அவளை அங்கிருந்து போக விட்டிருக்கிறது அந்த கும்பல்.

கைது செய்யப்பட்ட Lukasz Herbaவுக்கு 16 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்