பிரித்தானியாவில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய், மகள்! அதிர்ச்சி சம்பவத்தை விளக்கிய பக்கத்து வீட்டுக்காரர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள தெரு ஒன்றில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் இரண்டு பெண்கள் ரத்தவெள்ளத்தில் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. தற்போது குற்றவாளியை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறுகையில், நேற்று இரவு திடீரென பெண் ஒருவர் பயங்கரமாக கத்தும் சத்தத்தை கேட்டேன். அவர் கத்தும்பொழுது வேறு ஏதோ ஒரு மொழியில் பேசினார்.

அவர் பேசியது ஆங்கிலம் இல்லை என்பதை மட்டும் என்னால் புரிய முடிந்தது. சத்தம் கேட்டு வெளியில் வந்த பொழுது, ஒரு நபர் அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடினார் என தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்