தென் கொரிய நபருக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட சோகம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

தனது ஸ்கூட்டரில் உலகை வலம் வந்த தென் கொரிய நபருக்கு பிரித்தானியாவின் மான்செஸ்டரில் அந்த ஸ்கூட்டர் களவு போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய நாட்டவரான Yung Gu Ro தமது Honda PCX125 ஸ்கூட்டரில் இதுவரை 37 நாடுகளை கடந்துள்ளார்.

சுமார் 64,000 கி.மீ தொலைவு பயணம் செய்துள்ள அவருக்கு வெள்ளியன்று நடந்த சம்பவம் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

தமது ஒவ்வொரு சாகசங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்த Yung Gu வெள்ளியன்று மாலை, மிகவும் வருத்தமான பதிவு ஒன்றை பதிவு செய்தார்.

அதில், எனது பயணங்கள் இதோ மான்செஸ்டரில் முடிவுக்கு வந்துள்ளது. யாரோ எனது ஸ்கூட்டரை களவாடி சென்றுள்ளனர் என்றார்.

43 வயதான Yung Gu தற்போது தென் கொரியா செல்ல முடியாமல் தவித்து வருகிறார். அவரது ஸ்கூட்டருடன் முக்கியமான பயண ஆவணங்களையும் திருடர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் மான்செஸ்டரில் உள்ள ஸ்கூட்டர் ஓட்டும் குழு ஒன்று Yung Gu-வின் உதவிக்கு வந்துள்ளது. அவரை தென் கொரியா அனுப்பிவைக்கும் பொறுப்பு தங்களுடையது என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

வெள்ளியன்று அவரது பைக் களவு போனதும் உடனடியாக கொரியா பொலிசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.

அதன் பின்னர் மான்செஸ்டர் பொலிசாருக்கும் தமது நிலையை தெரியப்படுத்தியுள்ளார். தற்போது மான்செஸ்டர் பைக் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி அவருக்கு ஒரு ஸ்கூட்டர் பரிசளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்