ரகசிய காதலனுடன் இணைந்து 5 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தாய்: 22 ஆண்டுகள் சிறை

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் தனது ரகசிய காதலனுடன் இணைந்து தனது 5 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தாய்க்கு சிறை தண்டனை விதித்து Portsmouth Combined நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டகாரணங்கள் கருதி அப்பெண்ணின் பெயர் வெளியிடப்படவில்லை. இப்பெண்மணி தனது 5 வயது மகள் மற்றும் மகனை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இவர் தனது ரகசிய காதலன் மீது கொண்ட தீராக்காதல் காரணமாக, தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தனது மகளுக்கு போதை மருந்தினை கலந்துகொடுத்து பாலியல் வன்புணர்வு செய்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

சுமார், 4 மாதங்கள் இதுபோன்று நடந்துள்ளது. மேலும், குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும் இவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் மூலமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, பாலியல் வன்புணர்வு, ஆபாச புகைப்படங்களை வெளியிட்டது போன்ற குற்றங்களுக்காக, தாய்க்கு 22 ஆண்டுகள் சிறையும், காதலனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்