அவசர எண்ணிற்கு போன் செய்த நோயாளியை துஸ்பிரயோகம் செய்த ஆம்புலன்ஸ் ஊழியர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

உடல்நிலை சரியில்லை என போன் செய்த நோயாளியை அவரது வீட்டில் வைத்து துஸ்பிரயோகம் செய்த ஆம்புலன்ஸ் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் செயல்பட்டு வரும் WMAS என்ற ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் Trevor Finnerty (61). கடந்த ஆண்டு, "உங்களது ஆம்புலன்ஸ் சேவை எப்படி இருக்கும்" என கேட்டு பெண் ஒருவர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

உடனே அவரது வீட்டிற்கு சென்ற Trevor அந்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்துவிட்டு பணிக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் Trevor-ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது பேசிய Trevor, அன்றைய தினம் நான் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதும், அவருடைய படுக்கையறைக்கு என்னை அழைத்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன். நீ வரவில்லை என்றால் உன்னை பற்றி மேலிடத்தில் புகார் அளிப்பேன் என அந்த பெண் மிரட்டியதாலே உறவில் ஈடுபட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் அவருடைய தொலைபேசி அழைப்புகள் மட்டும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்த பொலிஸார், சம்மந்தப்பட்ட பெண்ணை துஸ்பிரயோகம் செய்து முடித்த பின்னர், Trevor போனிலிருந்து ஒரு குறுஞ்செய்தி சென்றிருப்பதை பார்த்தனர். அதில், "இது ஒரு நட்பு ஆம்புலன்ஸ் சேவையாகும், எங்களுடைய சேவை எப்படி இருந்தது" என அனுப்பியிருந்தார்.

Trevor மீது தவறு இருந்தது உறுதியானதும் அவரை கடந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வரும்பொழுது, சம்மந்தப்பட்ட பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், அவருக்கு மனநல ஆலேசனை வழங்கவேண்டும் எனவும் பொலிஸார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்துடனேயே நடந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, Trevor-ஐ விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேசமயம், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மறுநாள் பிப்ரவரி 1-ம் தேதியே தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...