அக்காவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தங்கை: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்தில் அக்காவின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, மாரடைப்பால் மயங்கி விழுந்த தங்கை கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் Stoke-on-Trent நகரத்தை சேர்ந்தவர் Kim Marriott (40). இவருக்கு 23 வயதில் Nicole Firkins துன்ற மகளும், 19 வயதில் Chloe Marriott என்ற மகளும் உள்ளனர்.

கர்ப்பினி பெண்ணான Nicole-ற்கு கடந்த 18-ம் தேதியன்று உறவினர்கள் அனைவரின் முன்னிலையிலும் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்பொழுது, தனக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக Nicole, தன்னுடைய தங்கை Chloe-டம் கூறினார்.

இதனை கேட்ட அடுத்த நிமிடமே Chloe, நெஞ்சை பிடித்துக்கொண்டு மயக்கமடைந்து தரையில் விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு தி ராயல் ஸ்டாக் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து பேசிய அவருடைய அம்மா Kim, Chloe பிறக்கும் போதே இதயத்தில் கோளாறு இருந்தது. இதனால் அவளுக்கு தற்போது வரை 15 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். மற்றவர்களை விட எப்பொழுதுமே அவள் மீது கொஞ்சம் அக்கறை அதிகம்.

அவளுக்கு ஏற்கனவே 21 வயதில் ஒரு மருமகன் உள்ளான். தற்போது தன்னுடைய அக்காவிற்கும் ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை கேள்விப்பட்டதும், உற்சாக மிகுதியில் தான் அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அவள் கோமா நிலையில் இருக்கிறாள். அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், விரைவில் குணமடைந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்