உலகின் முதல் அந்தரங்க ஆலோசகர்: பிரித்தானியாவைக் கலக்கிய பெண்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் திருமண உறவு குறித்த போதுமான அறிவற்று இருந்தது.

ஆண்டுக்கு 3000 பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்தார்கள். அடிக்கடி கருவுற்றதால் கருச்சிதைவு செய்வதற்காக ஏராளமான மதுவைக் குடித்தார்கள் பல பெண்கள்.

தொடர்ந்து கர்ப்பமடைய வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் பல புது மணப்பெண்கள் கணவனை நெருங்குவதற்கே அஞ்சினார்கள்.

திருமணம் பாலுறவு தொடர்பான பல சந்தேகங்கள் நிலவிய கால கட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய விஞ்ஞானியான Marie Stopes கணவன் மனைவிக்கிடையேயான அந்தரங்க வாழ்வு குறித்த விளக்கப் புத்தகம் ஒன்றை எழுதினார்.

அவரது புத்தகம் உலகில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவரை பாலுறவு என்பதே மனைவியின் கடமை என்றும், பெரும்பாலும் பெண்ணின் விருப்பத்துக்கு எதிராகவே நடக்கும் அதில் பெண் எந்த சந்தோஷத்தையும் எதிர்பார்க்கக்கூடாது என்றும் மக்கள் எண்ணிக் கொண்டிருந்தனர்.

1918ஆம் ஆண்டு மிகவும் இளவயதில் டாக்டர் பட்டம் பெற்றவரான Stopes, பாலுறவு என்பது கணவன் மனைவி இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் விடயம் என்றும் பாலுறவு கொண்டாலும் கருவுறாமல் தவிர்க்க முடியும் என்பதையும் சமுதாயத்திற்கு கற்பித்தார்.

அவர் எழுதி வெளியிட்ட Married Love என்னும் புத்தகம், இரண்டு வாரங்களில் 2000 பிரதிகள் விற்றதுடன் ஆறு முறை மீண்டும் வெளியிடப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

1931ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருந்த அந்த புத்தகம் அதே நேரத்தில் பிரித்தானியாவில் 750,000 பிரதிகள் விற்பனையாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து நடந்ததுதான் ஆச்சரியமான விடயம், பலர், பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் Stopesக்கு தங்கள் அந்தரங்க வாழ்வில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்கள்.

வாரத்திற்கு ஆயிரம் கடிதங்கள் வரை வரலாயிற்று. அவைகளுக்கெல்லாம் அவர் பதில் எழுத ஆரம்பித்தார்.

அப்படி அவர் எழுதிய கடிதங்கள் பலரின் திருமண வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். அப்படி அவர் எழுதிய கடிதங்களில் 10,000க்கும் அதிகமானவை பிரித்தானிய நூலகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers