இதுதான் சிறு வயதில் பிரித்தானிய மகாராணி வாழ்ந்த வீடு: வெளியாகியுள்ள அரிய புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

வேல்ஸ் மக்கள் தங்கள் அன்பு இளவரசிக்காக பரிசளித்த வீட்டின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.

தனது சிறுவயதில் எலிசபெத் மகாராணி தனது தங்கை மார்கரட்டுடன் செலவிட்ட அரிய தருணங்கள் அந்த புகைப்படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறிய வீடு என்று அழைக்கப்படும் அந்த வீடு ராணியார் ஆறு வயதாக இருக்கும்போது அவருக்கு பரிசளிக்கப்பட்டது.

அவருக்குப் பின் அவரது பிள்ளைகள், அவர்களுக்குப் பின் அவர்களது பேரப்பிள்ளைகள் என அந்த வீடு இன்னும் இளவரசிகளின் பிடித்த வீடாக உள்ளது.

அதிலும் இளவரசி Beatrice தனது சிறு வயதின் பெரும்பகுதியை அந்த வீட்டில் செலவிட்டதோடு, உலகின் மிக கவர்ச்சியான வீடு அதுதான் என்று அதை வர்ணித்துள்ளார்.

எப்போதுமே தனது வீட்டை நேர்த்தியாக வைத்துக் கொள்பவர் என பெயரெடுத்த எலிசபெத் மகாராணி அந்த வீட்டையும் மிக நேர்த்தியாக வைத்திருந்தாராம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers