லண்டனில் குடல் வெளியேறும் அளவுக்கு நடந்த கொடூர தாக்குதல்! சிறுவர்களின் நிலை என்ன? பொலிசார் சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கடந்த வாரம் நடந்த கொடூர தாக்குதல் காரணமாக பொலிசார் 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Camberwel இருக்கும் Landor House பகுதியில் 30 பேர் கொண்ட கும்பல் கத்திகளைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவருக்கு குடல் வெளியேறும் அளவுக்கு கத்தியால் குத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசர் இளைஞர்கள் சிலரை காப்பாற்ற போராடியுள்ளனர். பொலிசார் காப்பாற்றுவதற்கு போராடியது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் 15 முதல் 16 வயது குட்பட்டவர்கள்.

அவர்களில் 8 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் 15 வயது ஆனவர்கள், இவர்கள் இரண்டு பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் உறுதியளித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர்.

பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை தான் கைது செய்துள்ளோம்.

என்ன நடந்திருக்கும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம், அதே சமயம் இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தம்மிடம் சாட்சியங்கள் வழங்கினால் உதவியாக இருக்கும்.

நாங்கள் அவர்களை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டார்.

அந்த வீடியோவைக் கண்டாவது யாரேனும் தகவல் கொடுக்க முன்வரலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 16-ஆம் திகதி 14 வயது சிறுவனை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

ஆனால் அந்த சிறுவனுக்கு பெயில் வழங்கப்பட்டுள்ளதால், அந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் மாதம் 5-ஆம் திகதி Camberwell Youth நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers