பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இரையான 7 வயது சிறுமியின் தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் ஷெபீல்ட் நகரில் 31 வயது நபரை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த தீர்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த நீதிபதி, பிரித்தானிய தெருக்களில் அதிகரித்துவரும் வாள் வெட்டு கலாச்சாரம் இத்துடன் முடிவுக்கு வரட்டும் என்றார்.

ஷெபீல்ட் நகரில் குடியிருக்கும் சமி அல் மசூரி என்ற 31 வயது நபரை கடந்த 2017 ஆன் ஆண்டு காலித் மொகாதே என்ற 22 வயது இளைஞன் கத்தியால் கொடூரரமாக தாக்கியுள்ளான்.

இதில் குற்றுயிராக மீட்க்கப்பட்ட மசூரி மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 22 வயது காலித் என்ற இளைஞரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஷெபீல்ட் கிரவுன் நீதிமன்ற நீதிபதி பால் வாட்சன் இலைஞர் காலிதுக்கு 27 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

பிரித்தானியாவில் வாள் வெட்டு கலாச்சாரம் என்பது புது எல்லைகளை தொட்டுள்ளதாக கூறிய நீதிபதி பால் வாட்சன்,

இதுபோன்ற ஒரு வழக்கிற்கு கடும் தண்டனை வழங்குவதால், மேலும் குற்றம் செய்வதற்கு இச்சமூகம் அஞ்ச வேண்டும் என்பதாலையே என்றார்.

நீதிமன்றம் இதுபோன்ற வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு உரிய கவனம் செலுத்த தவறினால், இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பது உண்மையே என்றார்.

மசூரியின் மனைவி மார்டினா, காலித் மேற்கொண்ட கொலைவெறி தாக்குதலால் தமது வாழ்க்கையும், தமது 7 வயது மகளின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...