என்ன ஆச்சு பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு? மக்களை குழப்பிய காட்சி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டன் தெருக்களில் திடீரென நடமாடிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கலைப் பார்த்த பிரித்தானியர்கள் இது ஹரியா? என்ன ஆச்சு ஹரிக்கு? என்பதுபோல் பார்த்தனர்.

ஹரியும் மெர்க்கலும் டாக்சி ஒன்றில் ஏறி பார்க் ஒன்றிற்கு சென்றதோடு மெர்க்கலின் நாயுடன் வாக்கிங்கும் சென்றது கண்டு மக்கள் ஒரு முறைக்கு இருமுறை திரும்பிப் பார்த்தனர்.

பின்னர் பப் ஒன்றிற்கு அவர்கள் இருவரும் செல்ல அங்குள்ளவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர்தான் அது ஹரியும் மேகனும் அல்ல, அவர்களைப்போல் மெழுகினால் செய்த தலைகளை அணிந்த நடிகர்கள் என்பது தெரியவந்தது.

Madame Tussauds மியூசியத்திற்கான விளம்பர நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

அந்த இரு நடிகர்களும் ஹரி மெர்க்கலைப் போல் மெழுகு தலைகளை அணிந்ததோடு, வழக்கமாக அவர்கள் அணியும் உடை போலவே நேர்த்தியாக உடையும் அணிந்திருந்தனர்.

அவர்களுடன் சென்ற நாயும் கூட மெர்க்கலின் நாயான Guy போலவே அச்சு அசலாக இருந்தது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...