காரை ஹெலிகாப்டராக மாற்றி அந்தரத்தில் பறந்த இளைஞர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய 3 சக்கர காரை ஹெலிகாப்டர் போல மாற்றி அந்தரத்தில் பறந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த Del Boy மற்றும் Rodney என்ற இரு நபர்கள் இணைந்து மூன்று சக்கர கார் ஒன்றினை கண்டுபிடித்திருந்தனர். சாலையில் அந்த கார் ஓடும் விதத்தை பார்த்து பொதுமக்கள் பலரும் சிரிக்க ஆர்மபித்திருந்தனர்.

இதனையடுத்து இருவரும் சேர்ந்து தங்களுடைய காரை ஒரு ஹெலிகாப்டர் போல வடிவமைத்து அதனை பறக்க வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். அவர்களுடைய முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், இணையதளவாசிகள் பலரும் ஆச்சர்யத்துடன் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், ஹெலிகாப்டர் போல மாற்றப்பட்டுள்ள காரில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அதிலிருந்து ஒரு கயிறு மற்றொரு காரின் மேல் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னே வேகமாக செல்லும் காரின் உதவியால், ஹெலிகாப்டர் உருவில் இருக்கும் கார் மெதுவாக மேலே எழுந்து பறக்க ஆரம்பிக்கிறது.

இதனால் அந்த குழுவே பெரும் சந்தோசத்தில் இருக்க, அது நீண்ட நேரம் நிலைக்காமல், தடுமாறி கீழே விழுகிறது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் காரில் உட்பகுதியில் இருந்த நபருக்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...