ஆடுகளை கொடுமைப்படுத்தும் பிரித்தானியர்கள்: அதிர்ச்சி வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கம்பளி தயாரிப்பிற்காக ஆடுகளின் உடலில் இருந்து ரோமத்தை அகற்றும் தொழிலை செய்பவர்கள் ஆடுகளை மோசமாக நடத்தும் வீடியோ ஒன்றை விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த ஒருவர் ரகசியமாக படம் பிடித்துள்ளார்.

அந்த வீடியோவில் ஆடுகளை தலையில் குத்துவதும், அவை அடங்கியிருப்பதற்காக அவற்றின் கழுத்தின் மேல் ஏறி நிற்பதும் பதிவாகியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள 25 பண்ணைகளில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்ட பீட்டா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஆடுகளின் உடலில் இருந்து ரோமத்தை அகற்றும்போது அவை சித்திரவதை செய்யப்படுவதை கண்டுள்ளார்.

ரோமம் அகற்றப்படும்போது காயம் ஏற்பட்டால் ஊசியையும் நூலையும் வைத்து துணி தைப்பது போல் தைப்பதும் மயக்க மருந்து கொடுக்காமலே அது செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட ஆட்டை ஒருவர் தாக்கியதில் அதற்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது.

ஆடுகளை ரோமம் கத்தரிப்போருக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்படுவதால், அதிக ஆடுகளை ரோமம் கத்தரிப்பதற்காக அவர்கள் இவ்வாறு செய்வதாக தெரியவந்துள்ளது.

ஆடுகளை ரோமம் கத்தரிப்பதும் அவசியம், இல்லையென்றால் அவற்றின் உடலில் ஈக்கள் முட்டையிட்டு அதனால் ஆடுகள் அசௌகரியமாக உணரும்.

என்றாலும் அவை நடத்தப்படும் விதம் தவறு என்பதால் இதற்கு பீட்டா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகார துறை விலங்குகள் நல விதிகள் எங்கெல்லாம் மீறப்படுகிறதோ அங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வீடியோவை காண

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...