பிரித்தானியாவில் மகளை பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்த புலம்பெயர்ந்த தந்தை: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பாகிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மகளை, மாற்றாந் தந்தை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த நிலையில் தற்போது சிறையில் உள்ளார்.

West Yorkshire-ஐ சேர்ந்தவர் மரியம் (49). இவரின் மகள் சோனியா (24). சோனியாவுக்கு ஐந்து வயது இருக்கும் போதே அவர் தந்தை இறந்துவிட்டார்.

இதையடுத்து மரியம் இஜாஸ் அக்தர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

மாற்றாந்தந்தையாக இருந்தாலும் சோனியாவை அக்தர் தனது சொந்த மகளை போல பாசமாக வளர்த்தார்.

இந்த சமயத்தில் தான் மரியம் - அக்தர் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் 2002-2004 காலக்கட்டத்தில் பிறந்தது.

இந்நிலையில் சோனியாவின் பாட்டி கடந்த 2007-ல் பாகிஸ்தானில் உயிரிழந்தார்.

அப்போது அக்தரை தவிர அனைவரும் பாகிஸ்தான் சென்றனர்.

இறுதிச்சடங்குகள் முடிந்து மரியம் மற்றும் அவரின் இரண்டு பிள்ளைகள் அங்கேயே சில காலம் தங்கிய நிலையில், சோனியா மட்டும் தனது உறவினருடன் பிரித்தானியா திரும்பியுள்ளார்.

பின்னர் அக்தரும், சோனியாவும் மட்டும் வீட்டில் வசித்துள்ளனர்.

அப்போது அக்தரின் நடவடிக்கையில் சோனியாவுக்கு மாற்றம் தெரிந்தது.

மகளை தவறான எண்ணத்துடன் பார்த்த அக்தர் அவரை பலாத்காரம் செய்தார்.

இப்படியே தொடர்ந்து சோனியாவை மிரட்டி பலாத்காரம் செய்தபடி இருந்தார் அக்தர்.

இதனிடையில் மரியம் பிரித்தானியாவுக்கு திரும்பிய நிலையிலும் இது தொடர்ந்தது.

அக்தர் மிரட்டலுக்கு பயந்து சோனியா இதை வெளியில் சொல்லவில்லை.

ஒருநாள் மரியம் சமையலறையில் இருந்த போது அக்தர் சோனியாவை பலாத்காரம் செய்ய முயல, அந்த அறைக்கு எதேச்சியாக வந்த மரியம் அதிர்ச்சியடைந்து வெளியில் சென்றுள்ளார்.

பின்னரே சோனியா, தனக்கு அக்தரால் நடந்த கொடுமைகளை தாயிடம் விவரித்துள்ளார்.

இதையடுத்து மகளுக்கு ஆதரவாக இருந்த தாய் சோனியாவை வைத்து அக்தர் மீது பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து அக்தரை பொலிசார் கைது செய்து அவர் மீது நீதிமன்ற விசாரணை நடந்தது.

இந்நிலையில் கடந்த 2013-ல் அக்தர் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தற்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில், தனது தாயுடன் சோனியா மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...